மருந்து வாங்கி தருமாறுகோரிய தனது தாயை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகன் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை, ரத்மல் கடுவ கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிகொட தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான நல்லகருப்பன் கண்ணம்மா (வயது 65) என்பவரே தனது இண்டாவது மகனால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய சந்தேக நபரின் மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றிருந்த நிலையில் தனது தாய் மற்றும் எட்டு வயது மகளுடன் குறிந்த நபர் வசித்துவந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (5) மாலை சந்தேக நபர் கம்பளை நகருக்கு வந்த சந்தர்ப்பத்தில் தாய் தனக்கு மாத்திரைகள் வாங்கிவருமாறு கேட்டுள்ளார். எனினும் சந்தேக நபர் மாத்திரைகள் வாங்காது கையிலிருந்த பணத்திற்கு மது அருந்திவிட்டு இரவு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன்போது நோயின் வேதனையிலிருந்த தாய் மாத்திரைகள் எங்கே எனகேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டதையடுத்து சந்தேக நபர் தாக்கியுள்ளார்.
பின்னர் மறுதினம் சந்தேக நபரின் சகோதரன் தாயினை பார்க்க வந்த சந்தர்ப்பத்தில் தாய் காயமுற்று இருப்பதனை கண்டு கம்பளை வைத்திய சாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை ( 6) மாலை உயிரிழந்நுள்ளார்
சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைது செய்து மேற்கொண்ட விசாரணையின் போது, கதிரையினால் தாக்கியதாக வாக்கு மூலம் வழங்கியுள்ளபோதும் சந்தேக நபரின் எட்டுவயது மகள் தனது தந்தை பாட்டியை இரும்பு கம்பியினால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
கம்பளை நிருபர்
