இலங்கையின் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் நிலையானதாக காணப்படும் பட்சத்தில் முதலீடுகளை ஈர்ப்பது கடினமாக இருக்காது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
சீனாவிற்கான தனது விஜயத்தின் போது, சைனா ஹார்பர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் தயாராகவுள்ள அதேநேரம், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கு சினோபாக் நிறுவனம் தயாராக உள்ளதென தெரிவிக்கப்பட்டது எனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.