மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு – அம்பாறையில் சோகம்

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரவிக்குமார் லதீஸ் எனும் சிறுவனே இதன்போது உயிரிழந்துள்ளார்.

குடிதண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் குறித்த பகுதியில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் நிரம்பிய நீரை அவ்வப்போது சில தேவைகளுக்காகச் சிறுவனின் குடும்பம் பயன்படுத்தியுள்ளது. இதனை அவதானித்துள்ள அந்தச் சிறுவனும் அந்தக் குழியில் யாரும் அவதானிக்காத நேரத்தில் நீரை அள்ள முயற்சித்துள்ளார். இதன்போது குறித்த சிறுவன் குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles