மலைநாட்டில் சிவப்பு எச்சரிக்கை வலயத்திலுள்ள பாடசாலைகளை மூட தீர்மானம்

மத்திய மாகாணத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகளை விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், நுவரெலியா உட்பட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண ஆளுநருடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேற்படி சந்திப்பு தொடர்பில் க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன்,

மத்திய மாகாணத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடும் அதிகாரத்தை அதிபர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள அதிபர்கள் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கும் அது தொடர்பான அறிவிப்பை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles