” மலையகத்திலும், வடக்கிலும் ‘வாழைப்பழச் சீப்பு’ சின்னத்தில் மைத்திரி போட்டி!

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழைப்பழச் சீப்பு சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இன்று சனிக்கிழமை (07) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து கட்சி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

அதன் பின்னராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிலரே யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் செயற்பட்டனர். மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். அந்த மாற்றத்தை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் உட்பட இலங்கை முழுவதும் தனித்துப் போட்டியிடவுள்ளோம். தேர்தல்களில் அடிப்படையான பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை பாராளுமன்றம் என நாம் தேர்தலில் போட்டியிடுவோம் – என்றார்.

அதேவேளை, மலையகத்திலும் இவ்வணி வாழைப்பழச்சீப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Related Articles

Latest Articles