“ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக பெருந்தோட்ட மக்கள், ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ இலங்கை தொழிலாளர் காங்கிரஸைதவிர மலையகத்தில் உள்ள ஏனைய கட்சிகளின் ஆதரவு சஜித்துக்குதான். ஆனால் காங்கிரசுக்கு அன்று இருந்த ஆதரவு இன்றில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் சஜித்துக்கே மலையக மக்கள் ஆதரவு வழங்கினர்.” – என்றும் அவர் கூறியுள்ளார்.










