இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் வதிவிடத்தில் நடைபெற்றது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி., இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்தியாவின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள, மேற்கொள்ளப்பட்டுவரும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் அரசியல் மற்றும் உரிமைசார் விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மலையக மேம்பாட்டுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
