“ மலையகத்தில் காணி வீட்டுத் திட்டம் சரிவராது. 10 பேர்ச்சஸ் காணியுடன் தனி வீடுதான் அவசியம். அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எதிரணியில் இருக்கும்போது மலையக மக்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய விடயங்களை, அதிகாரத்தில் இருக்கும்போது ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.










