மலையகத் தமிழர்களுக்கும் தீர்வு அவசியம்!

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது. அதற்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தமிழ்,முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்கள்மீது இந்நாட்டில் தேசிய அழுத்தமொன்று உள்ளது. பெரும்பான்மையினரால் தாம் ஆளப்படுகின்றோம் என்ற உணர்வு உள்ளது. இதற்கு உரமூட்டக்கூடிய பல சம்பவங்களும் எமது நாட்டில் இடம்பெற்றுள்ளன.

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், செல்வா, பண்டா ஒப்பந்தம், கறுப்பு ஜுலை மற்றும் போர் என அந்த பட்டியல் நீள்கின்றது.

எனவே, இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வு காணப்பட வேண்டும். அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வு காணப்பட வேண்டும். அவர்கள் வாழும் பகுதியை எல்லை நிர்ணயம் செய்து, அவர்களுக்கு ஆள்வதற்குரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles