2024 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுகளை ஆரம்பித்துள்ளார் என தெரியவருகின்றது.
இரு தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சியொன்றின் தலைவருடன் இதுவரை பேச்சு நடத்தப்பட்டுள்ளது என தம்மிக்க பெரேரா தரப்பு தெரிவிக்கின்றது.
அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு சிறு கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடனும் தம்மிக்க பெரேரா பேச்சுகளை நடத்திவருகின்றார்.
மலையகத்தை மையமாக கொண்டு இயங்கும் சிறு கட்சிகளுடனும் தம்மிக்க பெரேரா பேச்சு நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது. அதேபோல மலையகத்தில் உள்ள பிரதான கட்சிகளையும் சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.