மலையக காந்தி கே. இராஜலிங்கம் ஐயாவின் 114 ஆவது ஜனன தினம் இன்றாகும்….

‘மலையக காந்தி’ என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 114 ஆவது ஜனன தினம் இன்றாகும். (03)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை – இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், புஸல்லாவை, சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகருமான அமரர் கே. இராஜலிங்கம் மலையக மக்களுக்காக பல சேவைகளை ஆற்றியுள்ளார்.

மலையக மக்களுக்கு கல்விகண் திறப்பதற்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சொத்துகளையெல்லாம் விற்று, கிடைத்த அரச சேவையையும் துறந்து – திருமணம்கூட முடிக்காமல் செத்து மடியும்வரையும் மக்களுக்காகவே வாழந்தவரை நினைவுகூர வேண்டியது அனைவரினதும் கடப்பாடாகும்.

Related Articles

Latest Articles