மலையக குயில் அசானிக்கு நாளை அமோக வரவேற்பு!

மலையக குயில் அசானிக்கு நாளை ( 20.12.2023) அமோக வரவேற்பளிக்கப்படவுள்ளது.

கம்பளை பிரதேச சபை வளாகத்துக்கு முன்னால் நாளை முற்பகல் 9.30 மணிக்கு வரவேற்பு ஆரம்பமாகும். அதன்பின்னர் வாகன பேரணியில் அவர் நயாப்பனை தோட்டம்வரை அழைத்துச்செல்லப்படவுள்ளார்.

நயாப்பான தோட்ட மக்கள், இளைஞர்கள் ஆகியோராலேயே நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று சமூக – அரசியல் செயற்பாட்டாளரான கை தம்பி கனகரட்னம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles