மலையக தமிழர்களின் குடியுரிமையை பறிக்க ஆதரவு வழங்கியவர்தான் ஜீ.ஜீ. பொன்னம்பலம் – நீதி அமைச்சர்

” மலையக மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஜீ.ஜீ பொன்னம்பலம் அன்று ஆதரவு வழங்கினார். அன்று அமைச்சு பதவி இருந்தபோது அது நல்ல முடியாக இருந்தது. ஜீ.ஜீ பொன்னம்பலம் ஒரு இனவாதி. ” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

” கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தையே தூண்டுகின்றார். அவரின் தந்தையான குமார் பொன்னம்பலம் முற்போக்குவாதி. எமது நண்பர் அவர். ஆனால் அவரின் தந்தையான ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஓர் இனவாதி.

1950 களில் கம்பளையில் கூட்டமொன்றை நடத்தி, சிங்கள மக்களின் மனங்கள் புண்படும் வகையில் கருத்து வெளியிட்டார். சிங்கள சமூகம் அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது.

மலையக தமிழர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவு வழங்கினார். அமைச்சு பதவி இருக்கும்போது அந்த முடிவு நல்ல முடியாக இருந்தது. ஏனைய நேரங்களில் இனவாதம் கதைத்தனர்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு நான் செய்தசேவையைவிட 10 வீதம்கூட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் எம்பிக்கள் செய்திருக்கமாட்டார்கள். வடக்கு, கிழக்கு மக்கள் சமாதானத்தையே விரும்புகின்றனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles