நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில். அதனை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று (23) மாலை பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் மற்றும் திம்புள்ள – பத்தன பொலிஸார் இணைந்து இதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.இதன்போது அத்தியாவசிய தேவைக்காக அன்றி அநாவசியமான முறையில் நடமாடியோர் கடும் எச்சரிக்கையுடன் திருப்பி அனுப்பட்டனர். வாகனங்களும் திருப்பி அனுப்பட்டன.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது வாகன அனுமதி பத்திரம், சாரதி அனுமதி பத்திரம்,மற்றும் பயணிப்பதற்காக அனுமதி பத்திரங்கள் சோதனை செய்யப்பட்டன.இதன் போது ஒரு சிலர் காலாவதியான அனுமதி பத்திரங்களை வைத்துக்கொண்டு பயணிப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
