” மலையக அபிவிருத்தி அதிகார சபையை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் கூறியவை வருமாறு,
” மலையக அபிவிருத்தி அதிகார சபையை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை தடுக்கும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை சபையில் முன்வைக்கின்றேன்.
வடக்கு, கிழக்கு மக்களின் மட்டும் அல்ல மலையக தமிழ் மக்களினதும் உரிமைகளையும் பறிக்கும் நிலைக்கு இந்த அரசாங்கம் வந்துள்ளது.
மலையக அபிவிருத்தி அதிகார சபையை நீக்குவதற்குரிய நடவடிக்கை தொடர்பில் மலையக மக்கள் தெரிவுசெய்து நாடாளுமன்றம் அனுப்பிய ஆளுங்கட்சி மலையக எம்.பிக்கள் வெட்கப்பட வேண்டும்.” – என்றார் சாணக்கியன்.