மலையக பெருந்தோட்ட மக்களை இழிவுபடுத்தும், ஹட்டன் மதீனா ஹோட்டல் உரிமையாளரால் கருத்து வெளியிடப்பட்டுள்ள சம்பவத்தைக் கண்டித்து, ஹட்டனில் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதற்கான கலந்துரையாடல் மலையக சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் திகதி விபரம் அறிவிக்கப்படவுள்ளது.
ஹட்டன் பகுதியானது நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கு பெயர்போன பகுதியாகும். இங்கு அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழ்கின்றனர். எனவே, இந்த போராட்டத்தை ஒரு சிலர், ஒரு சமூகத்துக்கு எதிரான போராட்டமாக காண்பிக்க முற்படலாம். அவ்வாறு அல்ல, மலையக சமூகத்தை இழிவுபடுத்திய, அரசியல் பின்புலம் கொண்ட நபருக்கு எதிரான போராட்டமாகவே இது அமையும் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.










