பொதுத்தேர்தலின்போது மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பேராதரவு எமக்கு கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
“ ஜனாதிபதி தேர்தலின்போது மலையக தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். அதைவிடவும் கூடுதல் ஆதரவை அவர்கள் நிச்சயம் பொதுத்தேர்தலில் வழங்குவார்கள்.
இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் நம்பிக்கையை வென்ற ஒரேயொரு தேசிய அமைப்பு தேசிய மக்கள் சக்தியாகும்.” – எனவும் ஜனாதிபதி கூறினார்.
அதேவேளை இலங்கை அரசியல் வரலாற்றில் இம்முறையே அரசியல்வாதிகள் ஓய்வுபெறும் அறிவிப்பை விடுத்துவருகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.