மலையக மண்ணுக்கு பெருமைமிகு தருணம்…..!

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட AIBT கெம்பஸ் தனது 2023 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா  கடந்த 16/12/2023 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் , இலங்கை சு‌ற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் கிமார்லி பெர்னண்டோ தலைமையில் நடத்தியது.

இதன்போது முதுநிலை வணிக நிர்வாக பிரிவில் (MBA) சிறப்பு பொது மேலாண்மை MBA (Sp) Hons (General Management) பட்டத்தை சிவனு சத்தியமூர்த்தி தனதாக்கி கொண்டுள்ளார்.

இவர், இதற்கு முன் கடந்த காலங்களில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் PGDip.(Busi.mgnt) மற்றும் மனித வள மேலாண்மை டிப்ளோமா Dip (HRM) இது மற்றுமின்றி அலுவலக நிர்வாக டிப்ளோமா Dip (OA) போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

தோட்ட தொழிலாளியின் மகனான இவர் தற்போது வரையறுக்கப்பட்ட மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி பிராந்திய காரியாலயத்தில் நிர்வாக நிர்வாகியாக கடமையாற்றுகிறார்.

இவருடைய மகன்களில் ஒருவரான டிப்ளோமா பட்டத்தாரி சத்தியபிரதிப் வரையறுக்கப்பட்ட கேகாலை பெருந்தோட்ட கம்பனி தோட்டமொன்றில் உதவி தோட்ட முகாமையாளராகவும் மற்றைய மகன் சத்தியபிரதாப் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவரும் இவருடைய மகள் சத்தியபிரியங்கா கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீட இறுதி ஆண்டு மாணவியுமாவார்.

இவர் தனது கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கல்வியை பொகவந்தலாவை எல்பட த.வி , நோர்வூட் த.ம.வி , பொகவந்தலாவை ஹொலிரோசரி த.ம.வி மற்றும் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் பெற்றுள்ளார்.

இவருக்கு வரையறுக்கப்பட்ட மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் சிரேஷ்ட வாரிய இயக்குனர்கள், தலைமை நிர்வாக அதிகாரி, பொது முகாமையாளர், உதவிபொது முகாமையாளர், பெருந்தோட்ட முகாமையாளர்கள், பொருந்தோட்ட உத்தியோத்தர்கள், உறவினர்கள், நண்பர்களென அனைவரும் தமது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தேசிய பெருந்தோட்ட முகாமை நிறுவனம் (NIPM) ஏற்பாடு செய்திருந்த பெருந்தோட்ட அலுவலக ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி நெறிக்கு மஸ்கெலியா பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு நாட்கள் நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிக நிர்வாக முகாமைத்துவத்தில் டாக்டார் பட்டம் (PhD) பெற்று உயர் செயற்திறன் மற்றும் திறமை வாய்ந்த நிர்வாக முகாமைத்துவத்தை நோக்கி பயனிப்பதே தனது எதிர்கால இலக்கு என்பதை குறிப்பிட்டதோடு இவருடைய வளர்ச்சிக்கு அனைத்து வழிகளிலும் உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

200 ஆண்டு மலையக மக்களின் வாழ்க்கை வரலாற்றில் இவரும் ஒரு சாதனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய எதிர்கால இலட்சியங்கள் நிறைவேற மனதார வாழ்த்துக்கின்றோம்.

 மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles