மலையக மக்கள் முன்னனியின் உயர்பீட உறுப்பினரும், மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளருமான லெட்சுமனார் சஞ்சய், தமிழக மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானை, அவரின் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை – இந்திய உறவு தொடர்பாகவும், இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த மலையக மக்களின் 200 வருட வாழ்க்கை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறுபான்மையினமாக இலங்கையில் மலையக சமூகம் காணப்படுகின்றது. அவர்களுக்கான காணி உரிமையோடு ஏனைய அபிவிருத்திகளையும் இந்திய அரசாங்கத்தின் ஊடாகவும் தமிழ்நாட்டின் உதவியூடாகவும் வழங்க கோரியும் , 13ஆவது திருத்தச்சட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்விடயம் அனைத்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் தெளிவுப்படுத்துவதாகவும் விரைவில் மலையகத்துக்கான அபிவிருத்திகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்தின் துணையோடு செயல்படுவதாகவும் கே.எஸ். மஸ்தான் தெரிவித்தார் என லெட்சுமனார் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்










