மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (01) கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles