மழை குறையும் சாத்தியம்!

பலத்த மழையுடனான வானிலை இன்று(04) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 8, 9ஆம் திகதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related Articles

Latest Articles