மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தில் சடலம் மிதப்பதை கண்ட மஸ்கெலியா கிராப்பு தோட்ட தொழிலாளர்கள், அது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்