மஸ்கெலியா, தபால் நிலைய வீதியில் அமைந்துள்ளது பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள பருப்பு மூடைகளை, குரங்குகள் கடித்து குதறி சேதப்படுத்துவதால் பெருமளவு தொகை பருப்பு நாசமாகின்றது என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், குறித்த வீதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் உள்ள பொருட்களையும் குரங்குகள் எடுத்துச்சென்று சேதப்படுத்திவருகின்றன என வியாபாரிகள் விசனம் வெளியிடுகின்றனர்.
எனவே, இப்பகுதியில் இருந்து குரங்குகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்
