மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா, மஸ்கெலியா, கிலன்டில் தோட்டத்தில் பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருக்கையிலேயே அவர்கள் இன்று மதியம் 4 மணியளவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைகளின் பின்னர் நால்வர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் மூவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்
