மஸ்கெலியா நகரிலுள்ள மதுபானசாலையொன்று நேற்றிரவு உடைக்கப்பட்டு, சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சீசீரிவி கமரா காட்சிகளின் உதவியுடன் கொள்ளையர்களை பிடிப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.
மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்










