மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு தம்பதியினரும், ஆண் ஒருவரும் கம்பஹாவில் உள்ள விற்பனையகம் ஒன்றில் பணிபுரிந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை அடுத்து மஸ்கெலியாவில் உள்ள தமது வீட்டுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் ரயில் மூலம் ஹட்டனுக்கு வந்து – பின்னர் பஸ் மூலம் மஸ்கெலியாவை சென்றடைந்துள்ளனர்.
இதனையடுத்து இவர்களுடன் தொடர்புடைய மூன்று குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.