மஹிந்தவின் அரசியல் கோட்டையில் இன்று கட்டுப்பணம் செலுத்துகிறது மொட்டு கட்சி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சியானது மூன்று மாவட்டங்களில் கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கிணங்க இன்றைய தினம் கொழும்பு, குருநாகல் மாவட்டங்களிலும் நாளைய தினம் புத்தளம் மாவட்டத்திலும் கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் நாளை நண்பகல் கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே களுத்துறை மாவட்டத்தில் சில தேர்தல் தொகுதிகளில் பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருணாகலை மாவட்டமானது மஹிந்தவின் அரசியல் கோட்டையாக பார்க்கப்படுகின்றது. கடந்த இரு பொதுத்தேர்தல்களில் அவர் அங்குதான் போட்டியிட்டார்.

Related Articles

Latest Articles