” மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுக்கவில்லை.” – என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பதற்காகவே கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது என வெளியான தகவல் வெறும் வதந்தியாகும். இராணுவத்தை களமிறக்கி, குறுக்கு வழியில் பதவிக்கு வரும் தலைவர் மஹிந்த அல்லர்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
