மஹிந்த சிங்கமாம்: மார்தட்டுகிறது மொட்டு கட்சி!

“மஹிந்த ராஜபக்ச என்பவர் சிங்கம். சிங்கம் ஒருபோதும் புல் திண்ணாது. ஷிராந்தி ராஜபக்சவை கைது செய்ய வேண்டாம் என மஹிந்த கோரினார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஷிராந்தி ராஜபக்சவை கைது செய்யவேண்டாமென மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்தாரென வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இது திட்டமிட்ட அடிப்படையில் பரப்பட்ட வதந்தியாகும். தேர்தல்காலத்தில்போன்று தேசிய மக்கள் சக்தியால் திட்டமிட்ட அடிப்படையில் பரப்பட்ட போலி தகவலே இது. இதனை முற்றாக நிராகரிக்கின்றோம். சிலவேளை போலிக் கடிதங்களைக்கூட தயாரித்திருக்கலாம்.” – மகாநாயக்க தேரர்களிடம் மஹிந்த ராஜபக்ச இப்படியொரு கோரிக்கையை விடுக்கவே இல்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles