அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் 30 இற்கு மேற்பட்ட முன்னாள் எம்.பிக்கள் போட்டியிடவுள்ளனர் என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தி அலையை சமாளித்து, தமது கட்சிகளுக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலும், மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை நாடிபிடித்து பார்க்கும் வகையிலுமே முன்னாள் எம்.பிக்கள் இவ்வாறு களமிறங்கவுள்ளனர்.
நவீன் திஸாநாயக்க, உதய கம்மன்பில, ஹிருணிக்கா பிரேமசந்திர, முஷாரப், மருதபாண்டி ராமேஸ்வரன், , யோகேஸ்வரன் உட்பட மேலும் பல முன்னாள் எம்.பிக்களே போட்டியிடுவது பற்றி ஆராய்ந்துவருகின்றனர்.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் வடக்கிலுள்ள முன்னாள் எம்.பிக்களும் போட்டியிடவுள்ளனர். குறிப்பாக கட்சி தீர்மானிக்குமானால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக சில எம்.பிக்கள் பதவி விலகவுள்ளனர். மலையகத்திலுள்ள முக்கிய சில அரசியல் பிரமுகவர்களும் தேர்தலில் குதிக்கவுள்ளனர்.










