ஈழத் தமிழ் சகோதரர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நம்பி வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுங்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மனோ கணேசன் இவ்வாறு வலியுறுத்தினார்.
‘ ஈழத் தமிழ் சகோதரர்கள் உங்களை நம்பி வாக்களித்தார்கள் , இது நல்ல விடயம்தானே? எனவே, நம்பிக்கையை நிறைவேற்றுங்கள். அந்த நம்பிக்கையை கௌரவப்படுத்துங்கள்.
எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிருங்கள். அடுத்தக்கட்டம் நோக்கி செல்வதற்கான ஆரம்பபுள்ளியாக அது அமையட்டும்.” – என்றார்.
