மாட்டுக்கு புல் அறுக்க சென்ற குடும்பஸ்தர் வழுக்கி விழுந்து மரணம்! நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் சோகம்

மாட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் , வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்தில் மூன்று குழந்தைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மரே தோட்ட வலதல பிரிவில், திங்கட்கிழமை (14) மதியம் இடம்பெற்றுள்ளது.

வழுக்கி விழுந்த போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டமையால் மயங்கி விழுந்து கிடந்துள்ளார். பிரதேச மக்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Related Articles

Latest Articles