ஹட்டன் வெளிஒயா மலைமகள் வித்தியாலய அதிபருக்கு எதிராக பாடசாலைக்கு முன்னால் இன்று (25) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவரொருவரை கடுமையாக தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிபரின் முறைகேடான நிர்வாகத்துக்கு எதிராகவுமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
நீதி கோரி பெற்றோர் போராடுகையில் அவ்விடத்துக்கு பொலிஸார் வந்தனர். இதனையடுத்து எழுத்துமூலம் முறைப்பாட்டை பதிவுசெய்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்