இ.போ.ச. பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவர்களை பலவந்தமாக இறக்கி, அநாகரீகமாக நடந்துகொண்ட பஸ் நடத்துநர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
விசாரணைகள் நிறைவடையும்வரை அவர் சேவையில் மீள இணைத்துக்கொள்ளப்படமாட்டார் எனவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
