நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெட்சுமி தோட்டம் எல்பொட கீழ் பிரிவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட தோட்ட கள அதிகாரி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், நோர்வூட் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்தே இவர்களை கைது செய்துள்ளனர்.
தோட்ட அதிகாரிக்கு, நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள வீட்டிலேயே மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் பலாங்கொடை, பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்