மாத்தளை மாவட்டத்தில் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச்செய்கை!

மாத்தளை மாவட்டத்தில் பெரும் போகத்தில் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவுபயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்யும் அரசின் கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கமைய உப உணவுச் செய்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையில் மெதரட விவசாய அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்டத்தில் உப உணவுப் பயிர்ச் செய்கையில் முதற்கட்டமாக தம்புள்ள,கலேவெல,சீகிரியா,தேவஹவ,நாவுல,லக்கல,வில்கமுவ,யடவத்த ஆகிய பிரதேசங்களில் 5000 ஏக்கர் விவசாய நிலங்களில் சோளம்,எள்ளு,மிளகாய் ஆகிய பயிர்கள் இந்த பெரும் போகத்தின் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் 5000 பேருக்கு விவசாயத்துக்கு தேவையான விதை, உரம் என்பன மானிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதோடு, சலுகை அடிப்படையிலும் வங்கிக் கடனும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உப உணவுப் பயிர் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மூன்று இலட்சம் ரூபாய் வரையிலான கடன் குறைந்த வட்டியில் வங்கிகள் ஊடாக வழங்கப்பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அறுவடைசெய்யும் விவசாய உற்பத்திகளை கூடிய விலைக்கு சந்தைப்படுத்துவதற்கான உரிய வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதாக மெதரடகொவி திட்ட தம்புள்ள காரியாலயத்தின் அதிகாரி திலகே தெரிவித்தார்.

Related Articles

Latest Articles