2023 ஜனவரி இறுதிக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் இணக்கப்பாட்டுடனேயே அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், இதில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எழுவர் அமைச்சர்களாவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன, ராஜின சேனாரத்ன, குமார வெல்கம, ஜீவன் தொண்டமான், அதாவுல்லா ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.










