மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண சடங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் நேற்று மாவனெல்ல − பெமினிவத்தை பகுதியிலுள்ள மயானமொன்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.