மாவீரர் தினத்தன்று வடக்கில் சிறார்களுக்கு புலிகளின் உடை – வெறுக்கத்தக்க செயல் என்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

” மாவீரர் தினத்தன்று வடக்கிலே சிறார்களை பயங்கரவாதிகளாக்கிய சம்பவம், இந்நாட்டில் நடந்திருக்ககூடாத ஒரு சம்பவமாகும். அது கவலையளிக்கின்றது.” – என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” சில நாட்களுக்கு முன்னர் வடக்கில் மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சில சிறார்களைப் பயன்படுத்தி, புலிப்பயங்கரவாதிகள்போல் அவர்களுக்கு ஆடை அணிவித்து, கழுத்தில் சைனட் குப்பிக்கு ஒப்பான பொருளையும் மாற்றி சிறார்களை பயங்கரவாதிகளாக்கி இருந்தனர்.

இது இந்த நாட்டில் நடந்திருக்ககூடாத சம்பவமாகும். போர் காலத்தில் சிறார்களை புலிகள் அந்த அமைப்பில் இணைத்துக்கொண்டனர். நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் சிறார்களின் கழுத்தில் சயனைட்டுக்கு ஒப்பான பொருளை மாற்றிவிட்டு, பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுகின்றனர். இந்த சம்பவம் கவலையளிக்கின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles