மாஸ்டர் படத்துக்கு யூ சான்றிதல் வழங்க மறுப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்துக்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது. மாஸ்டர் படத்தை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இருப்பினும் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தலால் ஓ.டி.டி. முடிவை கைவிட்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் திரையிட தயாராவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு தணிக்கையில் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles