இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவரில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.
98 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 36.5 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் , சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
இதையடுத்து, 79 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 2வது இன்னிங்சில் 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் முடிந்தது.
ஆட்ட நாயகன் விருது முகமது சிராஜுக்கும், தொடர் நாயகன் விருது பும்ரா மற்றும் டீன் எல்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஓவர்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் முடிந்துள்ளது.