சம்மாந்துறை, நயினாகாடு பகுதியில் மின்சாரம் தாக்கி இரு சிறார்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த றியாஸ் முஹம்மட் ஆசீக் (வயது – 13) , முஹம்மட் இப்றாஹிம் (வயது – 13) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் விறகு தேடிச்சென்ற சந்தர்ப்பத்தில், ஆற்றில் உடைந்து வீழ்ந்திருந்த யானை வேலி மூலம் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
