இந்தோனேஷியாவில் உதைபந்தாட்ட வீரர் ஒருவர் மின்னல் தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உதைபந்து விளையாடிக் கொண்டி ருந்த போது, மைதானத்தில் இருந்த செப்டெய்ன் ரஹர்ஜா என்ற வீரரை மின்னல் தாக்கியுள்ளது.
இது தொடர்பான காணொலி தற் போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியாவின் சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான செப்டெய்ன் ரஹர்ஜா, மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையேயான உதைபந்தாட்ட போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன் போது, மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக காத்திருந்த வீரரை மின்னல் தாக்கியுள்ளது. இதையடுத்து, அந்த இடத்திலேயே விழுந்த அவரை சக வீரர்கள் வைத் தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், அவரை சோதனை செய்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத் தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.