மின்வெட்டு நேரம் நீடிப்பு?

எரிபொருள் இறக்குமதியை தாமதப்படுத்தினால் எதிர்காலத்தில் மின்வெட்டு காலம் நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஒரு வாரத்துக்கு மூன்று மணித்தியால மின்வெட்டை தொடர்ந்து அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையிடம் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உத்தேச மின் கட்டண திருத்தம் பொதுமக்களின் ஆலோசனைக்காக பகிரங்கப்படுத்தப்படும். பொதுமக்கள் நேற்று (28) முதல் 21 நாட்களுக்குள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles