மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இப்படியே சென்றால் காலையில் எழும் போது எரிபொருளின் விலையைப் போல மின்கட்டணமும் அதிகரித்திருக்கும் எனவும், அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்துமாறு மின்சார சபை இதுவரை எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை எனவும் தீர்வு வழங்குவதற்கான அந்த முன்மொழிவு வரும் வரை நாங்கள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் உள்ள தரவுகளின்படி, மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.