” உரிய நடைமுறைக்கு மாறாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
” மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையிடம் இருந்து உறுதியான முன்மொழிவுகள் எவையும் இன்னும் கிடைக்கவில்லை. ஊடகங்கள் மூலமே இது பற்றி அறியக்கிடைத்தது.
மின்சார சபையினால் முன்மொழிவு கிடைக்கப் பெற வேண்டும். அந்த முன்மொழிவு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த தரவைப் பயன்படுத்தி மின் கட்டணத்தை திருத்த வேண்டும்.
இம்முறை அதிகாரம் அமைச்சரவைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து உத்தரவைப் பெற்றுக்கொள்ளும் முறைமை காணப்படுகின்றது. அமைச்சரவை அல்லது வேறு எங்கிருந்தாவது அத்தகைய யோசனை முன்வைக்கப்பட்டால், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை . தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின், மின்சார கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் அல்லது மின்வெட்டிற்கு செல்ல நேரிடும் என அமைச்சர் கூறுகின்றார். இது நியாயமான வாதம் இல்லை .” – எனவும் ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அதேவேளை, 2023 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை , நாளை அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளது.