மீட்பு பணிக்கு மூன்று விமானங்கள் தயார் நிலையில்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, மூன்று ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

அவசர அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்படுவோரை மீட்கும் நோக்கிலேயே இந்த ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிங்குரங்கொட விமானப்படை தளங்களில் இந்த ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படும் வகையில், விமானப்படை மீட்பு குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

 

Related Articles

Latest Articles