முடிந்தால் 9,000 வாக்குகளை பெற்று காட்டவும்! விமல் தரப்புக்கு மொட்டு கட்சி சவால்!!

விமல் வீரவன்ச தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி தமது கட்சிக்கு சவாலாக அமையாது – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார,

” மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் விமல் தரப்பு வெற்றி பெற்றது. முடிந்தால் தனித்து போட்டியிட்டு 9 ஆயிரம் வாக்குகளை பெற்று காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்.” – எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், 2010 ஜனாதிபதி தேர்தலின்போது பொன்சேகாவுக்கும் வாக்குகள் கிடைத்தன, எனினும், புதிய கட்சி ஆரம்பித்த பின்னர் ஒரு வீத வாக்குகூட கிடைக்கப்பெறவில்லை. அவருக்கு என்ன நடந்தது? எனவே, புதிய கூட்டணி எமது கட்சிக்கு சவாலாக அமையாது.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles