முதல் சுற்றுப் பேச்சு பிசுபிசுப்பு – போலந்து எல்லையில் இரண்டாம் சுற்று பேச்சு!

பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் ரஷ்ய – உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுக்கள் முன்னேற்றகரமான முடிவுகள் எதனையும் எட்டாத போதிலும் இரு தரப்புகளும் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கியுள்ளன.

உக்ரைன் நாட்டின் சமாதானப் பேச்சுக் குழுவின் மத்தியஸ்தர் ஒருவர் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

ரஷ்யாவின் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர், அடுத்த கட்டப் பேச்சுக்கள் சில தினங்களில் போலந்து-பெலாரஸ் நாடுகளது எல்லையில் நடைபெறும் என்பதை அறிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகரை ரஷ்யப்படைகள் நாலாபுறமும் வல்வளைப்புச் செய்ய முயன்று வருகின்றன. நகரிலிருந்து மாபெரும் சனத்திரள் வெளியேற்றம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இரு தரப்பினரிடையேயான முதலாவது சமாதானப் பேச்சுக்கள் நேற்று திங்கள் பகல் பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள கோமல் (Gomel) பிராந்தியத்தில் நடைபெற்றது.

பேச்சுக்களை முடித்துக் கொண்டு இரு தரப்பினரும் தத்தமது தலைநகரங்களுக்குத் திரும்பி விட்டனர் என்பதை பெலாரஸின் ‘பெல்ரா’ (Belta) செய்தி நிறுவனம் உறுதிசெய்தது.

பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்னராக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்குமாறு உக்ரைன் அரசு ரஷ்யாவிடம் கோரியிருந்தது.

இவ்வாறு சமாதான முயற்சிகள் ஒருபுறம் நடக்கையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பத்தில் நேற்று மாலை ஒப்பமிட்டுள்ளார். இத்தகவலையும் அதிபர் ஒப்பமிடும் காட்சியையும் அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

இதேவேளை, பிரான்ஸின் அதிபர் மக்ரோன் நேற்று மீண்டும் புடினுடன் சுமார்ஒன்றரை மணிநேரம் தொலைபேசி வாயிலாகப் பேச்சு நடத்தியுள்ளார் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.

சிவிலியன் இழப்புகளைத் தவிர்ப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்று புடின் இந்தப் பேச்சின் போது மக்ரோனிடம் உறுதியளித்துள்ளார்.

*2014 இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாக் (Crimea) குடாவை ரஷ்யாவின் எல்லையாக அங்கீகரிக்க வேண்டும் –

*இராணுவ மயப்படுத்தப்படாத (de militarization), – நாஸிக்களின் பிடியில் இருந்து நீக்கப்பட்ட (denazification) பக்கம் சாராத ஒரு நாடாக உக்ரைன் மாற்றப்படவேண்டும் –

இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் உக்ரைனில் இருந்து தனது படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அதிபர் புடின் மக்ரோனிடம் மீண்டும் வலியுறுத்தினார் என்று எலிஸே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles