முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் முதல் நடிகராக நடித்த ஷான் கானெரி 90 வயதில் காலமானார்.

ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. இதில் முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷான் கானெரி.

இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் இன்று காலமாகி இருக்கிறார். தூக்கத்திலேயே இவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Related Articles

Latest Articles